துபாய் நாட்டுக்கு கன்டெய்னரில் கடத்த முயன்ற ரூ.2¾ கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்

துபாய் நாட்டிற்கு கன்டெய்னரில் கடத்த முயன்ற ரூ.2¾ கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-03-08 22:54 GMT
மும்பை,

மும்பையில் இருந்து கன்டெய்னர்களில் கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு அதிகளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் சம்பவத்தன்று துபாய் நாட்டிற்கு செல்லும் கப்பலில் ஏற்ற தயாராக வைத்திருந்த மக்காச்சோளம், கல் பலகைகளால் நிரப்பட்டு இருந்த கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அந்த கன்டெய்னர்களில் மக்காச்சோளம் மற்றும் கல் பலகைகள் இடையே அதிகளவில் செம்மர கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கன்டெய்னர்களில் இருந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பிலான 7.1 டன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதிகாரிகள் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக சுஜித், காயா பிரசாத், கம்லேஷ் மற்றும் ரோகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்