சித்தராமையா துக்ளக் ஆட்சி நடத்துகிறார் எடியூரப்பா பேட்டி

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச கர்நாடக பா.ஜனதா தலைவர் நேற்று டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

Update: 2018-03-08 23:36 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு தான் அனைத்து துறைகளிலும் முதன்மையாக செயல்பட்டு வருவதாக முதல்–மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். அவர் சொல்வது படி ஊழலில் காங்கிரஸ் அரசு முதலிடத்தில் உள்ளது. சட்டம்–ஒழுங்கு சீர்குலைவில் முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. லோக் அயுக்தா அலுவலகத்திற்குள் புகுந்து நீதிபதியே கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதற்கு முதல்–மந்திரி சித்தராமையா என்ன பதில் சொல்ல போகிறார்?. நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாதபோது, சாதாரண மக்களுக்கு இந்த அரசால் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்.

முதல்–மந்திரி சித்தராமையா துக்ளக் ஆட்சி நடத்துகிறார். இந்த ஆட்சியை இன்னும் 2 மாதம் மட்டுமே மக்கள் சகித்து கொள்வார்கள். காங்கிரஸ் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. ராய்ச்சூரில் வருகிற 13–ந் தேதி நடைபெற உள்ள இந்திய தகவல் தொழில் தொடர்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்