மோட்டார் சைக்கிள்–கார் மோதல்: காற்றாலை தொழிலாளி சாவு

தென்காசி அருகே, கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற காற்றாலை தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

Update: 2018-03-09 20:30 GMT
தென்காசி,

தென்காசி அருகே, கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற காற்றாலை தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

காற்றாலை தொழிலாளி

தென்காசி புதுமனை 4–ம் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(வயது32). இவர், குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள தனியார் காற்றாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து குத்துக்கல்வலசையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். தென்காசி–மதுரை ரோட்டில் குத்துக்கல் வலசையை அடுத்துள்ள அண்ணாநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சம்பவ இடத்தில் சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்