காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-15 22:00 GMT
மந்தாரக்குப்பம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொது சேவை அமைப்பினர், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம் என பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி கிராம மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி பெரியாக்குறிச்சி கிராம மக்கள் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மந்தாரக்குப்பத்தை சேர்ந்த தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்