டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

செய்யாறு அருகே அசனமாப்பேட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-15 23:00 GMT
செய்யாறு,

வெம்பாக்கம் தாலுகா அசனமாப்பேட்டை கிராமத்தில் தமிழக தன்னார்வ தொண்டர்கள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தியும், அசனமப்பேட்டை கூட்ரோடு மற்றும் ½ கிலோமீட்டர் தொலைவில் பெருங்கட்டூர் கிராம எல்லையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், டாஸ்மாக் கடையினால் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் குடிபோதைக்கு ஆளாகி வருகின்றனர். டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்திற்கு முன்னதாக டாஸ்மாக் கடையின் அருகிலேயே மறைமுகமாக பதுக்கி வைத்து அதிகாலை முதலே மது விற்பனை செய்கின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

இதனால் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு போதையில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், பெண்கள் உள்ளிட்டவர்களை கேலி, கிண்டல் செய்கின்றனர். இதனால் பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.எனவே, இப்பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பேசினர்.

இந்த போராட்டத்தில் பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்