குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு

குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் தந்த மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-04-17 22:45 GMT
காரைக்கால்,

ஏப்ரல் மாதத்திற்கான 2-வது பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் மஞ்சள்நிற ரேஷன் கார்டுகளை சிவப்புநிற கார்டுகளாக மாற்றித்தரவேண்டும் எனவும், தெரு மின் விளக்குகளை முறையாக பராமரித்து எரியவிட வேண்டும், குப்பைகளை முழுவதுமாக அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து, கலெக்டர் கேசவன் பேசும்போது, “இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கெங்கு கூடுதல் மின் விளக்குகள் தேவையென கணக்கிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் இணையதளம் மூலமாக வரும் புகார்கள் மீதும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்