மத்திய அரசுத் துறைகளில் உதவியாளர் மற்றும் அதிகாரி வேலை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது.

Update: 2018-04-24 05:06 GMT
யூ.பி.எஸ்.சி. அமைப்பு மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப   தற்போது  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும் உள்ளன. இவை தவிர மார்க்கெட்டிங் மேனேஜர், பிஸியாலஜி சிறப்பு மருத்துவ உதவி பேராசிரியர், பிளாஸ்டிக் சர்ஜரி உதவி பேராசிரியர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன. எம்.பி.ஏ., முதுநிலை மார்க்கெட்டிங் படிப்பு, எம்.பி.பி.எஸ்., எம்.இ., எம்.டெக். (சிவில்/பயர்), ஜியாலஜி பட்டப்படிப்பு, மற்றும் சட்டம் உள்ளிட்ட இதர பட்டப்படிப்பு படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது. விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 3-5-2018-ந் தேதியாகும்.


மேலும் செய்திகள்