அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

Update: 2018-05-05 22:21 GMT
வேலூர்,

இந்திய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் நேற்றுமுன்தினம் வேலூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் என பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, கடந்த ஆண்டு தமிழக அரசு அனுப்பிய ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தும் விதமாகவும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது என்றனர்.

மேலும் செய்திகள்