பாம்பலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பாம்பலம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-05-11 20:43 GMT
உப்பிடமங்கலம்,

உப்பிடமங்கலத்தை அடுத்த புதுகஞ்சமனூரில் உள்ள பாம்பலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நாள் பாம்பலம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மறுநாள் காலை அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. பின்னர் பாம்பலம்மனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் ஆகியவை நடைபெற்றன.

மஞ்சள் நீராட்டு

மாலை வாணவேடிக்கை நடந்தது. நேற்று முன்தினம் காலை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்