சாத்தூர் புறநகர் பகுதியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு

சாத்தூர் புறநகர் பகுதியான சிதம்பரம் நகர், எஸ்.ஆர்.நாயுடு நகர் பகுதியில் அடிப்படை வசதியின்றி அங்கு வசிப்போர் அவதிப்படுகின்றனர்.

Update: 2018-05-12 22:15 GMT
சாத்தூர்,

சாத்தூர் நகராட்சி பகுதியை யொட்டி சாத்தூர் யூனியன் வெங்கடாசலபுரம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.நாயுடு நகர், சிதம்பரம் நகர் பகுதிகள் அமைந்துள்ளன. புறநகர் பகுதியான இங்கு புதிதாக வீடு கட்டி குடியேற அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த ஊராட்சி அதிக வருமானம் வரும் முதல் நிலை ஊராட்சியாக உள்ளது.

வருவாய் அதிகமாக ஈட்டினாலும் அங்கு வசிப்போருக்கு அடிப்படை வசதி ஏதும் செய்து தரப்படவில்லை. வாருகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சாலையில் தேங்குவதால் அவை சேதமாகி குண்டும் குழியுமாக கிடக்கிறது.

குப்பைதொட்டி இல்லாததால் வீடுகளுக்கு அருகேயும் காலி மனைகளிலும் குப்பைகளை கொட்டும் நிலை இருக்கிறது. இதற்காக குப்பைதொட்டி வைத்து சுகாதாரம் பேண வேண்டும் என்று விடுத்த கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை என்று இந்தப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை வசதி செய்து கொடுக்க அக்கறை காட்டுவோர் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்