ராமநாதபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்கள் பிடிபட்டனர், லாரிகள் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்கள் பிடிபட்டனர். லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-05-12 21:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு டோங்ரே பிரவீன் உமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் இந்திராநகர் சுடுகாடு பகுதியில் 2 லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருப்பதை கண்டு அங்கு விரைந்து சென்றார்.

அப்போது அங்கிருந்தவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். உடனே லாரிகளை தடுத்து நிறுத்தி இதில் இருந்த 2 பேரை உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் பனிகவயல் ராமநாதன் மகன் தமிழ்பூமி (வயது25), இந்திராநகர் அமீர் கான் மகன் சபீர்அகமது (30) ஆகியோரை பிடித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில் எந்த அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்