காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கார் வியாபாரிகள் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல சங்கத்தின் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2018-05-12 22:30 GMT
தஞ்சாவூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களின் கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல சங்கத்தின் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர்கள் அறிவழகன்(தஞ்சை), பால மயில்வாகனன்(திருவாரூர்), மகேந்திரன்(நாகை) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் முகமதுஇக்பால், கவுரவ தலைவர்கள் ரொசலியா, முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ஜமால்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கார், இருசக்கர வாகனங்களின் வியாபாரிகள், ஆலோசகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்