ஏ.டி.எம்.யில் பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்து வங்கி வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

ஏ.டி.எம்.யில் பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்து வங்கி வாடிக்கையாளர்களி டம் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-12 23:00 GMT
தானே,

ஏ.டி.எம்.யில் பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்து வங்கி வாடிக்கையாளர்களி டம் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம். மைய மோசடி

தானேயில், மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தவரிடம் பணம் பறித்த ஆலம் கான் (வயது28), சந்தோஷ் (38), கம்லேஷ் (27), விஜய் (48), அலோக் (30), அகமது ஹூசேன் (24) ஆகியோரை சம்பவத்தன்று குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் 6 பேரும் தானே, மிரா பயந்தர், தகிசர், பிவண்டி, கல்யாண், சகாப்பூர், மும்ரா, பன்வெல், நாலச்சோப்ரா உள்ளிட்ட பல இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் உதவி செய்வது போல நடித்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மோசடியில் ஈடுபட்டது எப்படி?

ஏ.டி.எம்.யில் வாடிக்கையா ளர் யாராவது பணம் எடுக்க வந்தால் இந்த கும்பலில் ஒருவர் அவர் பின்னால் போய் நிற்பார். அப்போது வாடிக்கையாளர் அழுத்தும் பின் நம்பரை கவனித்து கொள்வார். இந்தநிலையில் வாடிக்கை யாளர் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்த தெரியாமல் தவிக்கும் போது பின்னால் நிற்கும் மோசடி கும்பலை சேர்ந்தவர் அவருக்கு உதவி செய்வது போல நடிப்பார். பின்னர் ஏ.டி.எம்.யில் பணம் இல்லை என கூறி அந்த வாடிக்கையாளரிடம் தன்னிடம் உள்ள போலி ஏ.டி.எம். கார்டை கொடுப்பார். வாடிக்கையாளரின் ஒரிஜினல் ஏ.டி.எம். கார்டை அவரே வைத்து கொள்வார். இந்தநிலையில் வாடிக்கை யாளர் சென்றவுடன் அவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்து கொள்வார்.

இதேபோல ஏ.டி.எம்.யில் பணம் எடுக்கும் வாடிக்கையா ளர் தனது பரிவர்த்தனையை ரத்து (கேன்சல்) செய்யாமல் செல்லும் போதும் இந்த கும்பல் அந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆலம்கான், சந்தோஷ் இருவரும் இதுபோன்ற மோசடியில் உத்தரபிரதேச மாநிலத்திலும் ஈடுபட்டுள்ளனர். போலீசார் கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து பல வங்கிகளின் போலி ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்