நெல்லை மாவட்டத்தில் பரவலான மழை

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்தது.

Update: 2018-05-13 21:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்தது.

மழை

நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. ரோட்டில் செல்லமுடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது. மாலை 3 மணிக்கு வெயிலின் தாக்கம் குறைந்தது. திடீரென வானத்தில் மேக மூட்டமாக காணப்பட்டது. 3.15 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மரம் சாய்ந்தது

பாவூர்சத்திரம் பகுதியில் நேற்று மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் பரலான மழை பெய்தது. அப்போது இலங்காபுரிபட்டணம் கிராமத்தில் காளியம்மன் கோவில் முன்பு நின்ற 75 ஆண்டுகள் பழமையான அத்திமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அதன் அருகில் இருந்த 2 மின்கம்பங்களும் சாய்ந்து முறிந்தன. மின்ஒயர்கள் அறுந்து விழுந்தன.

தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாய்ந்து விழுந்த அத்திமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்படி இருந்தும் இலங்காபுரிபட்டணம் அதன் சுற்றுப்புற பகுதியில் சிலமணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.

மேலும் செய்திகள்