கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

கிராமங்களில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது என்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-05-13 22:45 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கலையரசன் தலைமையில் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயலாளர் ராம.துரைசாமி, கடலூர் தொகுதி தலைவர் குமார், குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் கலைச்செல்வன், சேவாதள மாவட்ட தலைவர் ஜெகன், மாவட்ட செயலாளர்கள் கோகுல், பாபு, ஜெயமூர்த்தி, ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதர் பழனி வரவேற்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், கட்சியின் மேலிட பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி வருகிற 21-ந் தேதி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 50 பேர் ரத்ததானம் செய்வது , கிராமங்கள் தோறும் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பது என்றும், கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்துக்கு வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணை தலைவர் பாண்டுரங்கன், மீனவர் அணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன், தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராம்ராஜ், ஊடக பிரிவு மாநில செயலாளர் மணிகண்டன், வட்டார தலைவர் ராஜாராமன், முன்னாள் வட்டார தலைவர் அன்பழகன், நகர செயலாளர் உமாபதி, விவசாய பிரிவு தலைவர் தேவநாதன், மகளிர் அணி தலைவி கலைச்செல்வி, நிர்வாகிகள் ரமேஷ், அன்பழகன், ராஜாராம், ஓவியர் ரமேஷ், மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்