காலாவதியான மாம்பழக்கூழ் கொட்டி அழிப்பு துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

சாலையோரம் காலாவதியான மாம்பழக்கூழை கொட்டி அழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2018-05-13 22:30 GMT
கிருஷ்ணகிரி,

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா பயிரிடப்பட்டு வருகின்றது. இங்கு விளையும் மாங்காய்களை வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கி அதிலிருந்து மாம்பழச்சாறு எடுத்து அதை டின்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதற்்காக காவேரிப்பட்டணம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கும் மாம்பழக்கூழ்களில், காலாவதியான டின்களை தொழிற்சாலைகளில் இருந்து பழைய இரும்பு வியாபாரிகள் வாங்கி தகரத்தை தனியாக பிரித்தெடுக்க காரிமங்கலத்தில் பைபாஸ் சாலையோரம் கொட்டி அழித்து வருகின்றனர்.

இதில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் கெட்டுப்போன மாம்பழக்கூழ் தேங்கி நிற்பதால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அருணேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்