அவினாசி அருகே குடியிருப்பு பகுதி வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

அவினாசி அருகே குடியிருப்பு பகுதி வழியாக உயர் அழுத்த மின்பாதைஅமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-13 23:23 GMT
அவினாசி,

அவினாசி அருகே பழங்கரை ஊராட்சியில் பச்சாம்பாளையத்தில் ராஜீவ் காந்தி நகர் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரியத்தின் மூலம் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக் கும் பணி நடந்து வருகி றது. இதற்கு அந்தபகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மின்கம்பிகள் செல்வற்கான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் அவினாசி-பச்சாம்பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பழங்கரை ஊராட்சிமுன்னாள் துணைத்தலைவர் நடராஜன் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கூறியதாவது:-

தனியார் நிறுவனத்திற்கு மின்இணைப்பு வழங்க குடியிருப்புகளுக்கு மத்தியில் உயர் அழுத்தமின்பாதை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் உயர் அழுத்த மின்பாதை அமைத்தால், நாளடைவில் இந்த பகுதியில் உள்ளவர்கள் மாடி வீடு கட்டும்போது பாதிப்பு ஏற்படும். எனவே மின்பாதை அமைக்க கூடாது.

இவ்வாறுஅவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்று ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் கூறியதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்