ஆபத்தில்லாத கத்தி

நிஜத்தில் மரப்பலகையை கத்தியாக வடிவமைத்திருக்கிறது மாய்சன் மிலன் என்ற தைவான் நிறுவனம்.

Update: 2018-05-15 07:49 GMT
த்திகள், இரும்பு உலோக காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கூர்மை அதிகம் கொண்ட கத்திகள் நன்கு வெட்டும் என்பது நாம் அறிந்ததே. அதனால்தான் கூர்மை மழுங்கியதும் சாணை பிடித்து பட்டை தீட்டிக் கொள்கிறோம். ஆனால் கூர்மையான கத்திகள் ஆபத்தானவை என்பதும் நமக்குத் தெரிந்ததே. ஆபத்தில்லாமல் இருக்க வேண்டுமானால் மரத்தில்தான் கத்தி செய்ய வேண்டும் என்று நாம் வேடிக்கையாக நினைக்கலாம். நிஜத்தில் மரப்பலகையை கத்தியாக வடிவமைத்திருக்கிறது மாய்சன் மிலன் என்ற தைவான் நிறுவனம், சராசரி எடைகொண்ட மரப்பலகையை சீராக கூராக்கி தேவையான அழுத்தம் கொடுக்கும்போது கத்திபோல பயன்படுத்த முடியும் என்னும் நுட்பத்தில் இந்த மரக்கத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. கூரற்றதுபோல தெரிந்தாலும் இதன் எடை மற்றும் வடிவம் காய்கறிகளை வெட்ட பயன்படுகிறது. இதன் கைப்பிடி மிளகு, இஞ்சி போன்றவற்றை தட்டுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெட்டிய காய்கறிகள், பொருட்களை திரட்டி எடுக்க சிறந்த சாதனமாகவும் இதை பயன்படுத்தலாம். விலை சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய். 

மேலும் செய்திகள்