காவிரி ஆற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 மணல் மூட்டைகள் பறிமுதல்

முசிறி அருகே காவிரி ஆற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-05-15 22:45 GMT
முசிறி,

முசிறி தாசில்தார் கருணாநிதி, மண்டல துணை தாசில்தார் லோகநாதன், வருவாய் ஆய்வாளர்கள் முத்து, ராஜேஸ்வரி ஆகியோர் மணல் கடத்துவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முசிறியை அடுத்த ஏவூர் பகுதியில் காவிரி ஆற்றில் கடத்துவதற்காக மணல் அள்ளப்பட்டு, 250 சாக்குகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டுபிடித்த வருவாய்த்துறையினர் 250 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து முசிறி தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.

சரக்கு வேன்

இதேபோல் முசிறியை அடுத்த சேந்தமாங்குடி பகுதியில் மணல் கடத்தி சென்ற சரக்கு வேனை வருவாய்த்துறையினர் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். சரக்குவேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சரக்குவேனை வருவாய்த்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை முசிறி போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்