புற்றுநோய் மருந்து கடத்தி வந்த 2 பேர் கைது

வெளிநாட்டில் இருந்து புற்றுநோய் மருந்து கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-05-15 23:00 GMT
மும்பை,

துருக்கியில் இருந்து நேற்று முன்தினம் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அதிகாரிகள் அந்த பயணிகளின் உடைமைகளில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சட்டவிரோதமாக புற்றுநோய் மருந்து பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான புற்றுநோய் மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் மருந்து பொருட்கள் கடத்தி வந்தவர்கள் சிரியாவை சேர்ந்த கால்டவுன் ஜோடா மற்றும் தர்மனினி அலி என்பது தெரியவந்தது. விமான புலனாய்வு பிரிவினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மூத்த சுங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “ புற்றுநோய் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்து உள்ளனர் ” என்றார். 

மேலும் செய்திகள்