திருப்பூரில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய தபால் ஊழியர் சம்மேளனம் சார்பில் திருப்பூர் தலைமை தபால்நிலையத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-05-16 21:45 GMT

திருப்பூர்,

கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் ஊதிய பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தக்கோரி தேசிய தபால் ஊழியர் சம்மேளனம் சார்பில் திருப்பூர் தலைமை தபால்நிலையத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் கோட்ட தபால் ஊழியர் சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். தேசிய தபால் அலுவலர் சம்மேளன செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். கிராமப்புற தபால் ஊழியர் சங்க தலைவர் ரகுநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோ‌ஷமிட்டனர். முடிவில் தேசிய அலுவலர் சம்மேளன பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்