சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

காரில் மதுபாட்டில்கள் கடத்திய விவகாரம் தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் நேற்று உத்தரவிட்டார்.

Update: 2018-05-17 22:15 GMT
விழுப்புரம்

விழுப்புரம் கம்பன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து 170 மதுபாட்டில்களை கடத்தி வந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரில் இருந்த சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பாபு (வயது 40), அவரது உறவினர் ராஜ்குமார் (55) ஆகியோரை கைது செய்தனர்.

கைதான ராஜ்குமார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்பதும் கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரே, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததால், அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்