பால்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் நடராஜன் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத் தில் சிறிய அளவிலான பால்பண்ணை அமைக்க விரும்பும் நபர்கள் விண் ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

Update: 2018-05-17 22:30 GMT
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத் தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறிய அள விலான பால் பண்ணைகள் அமைக்கும் திட்டத்திற்கு 3 இலக்குகள் நிர்ணயம் செய் யப்பட்டு, பயனாளிகளை கீழ் காணும் வரையறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்ய வேண் டியுள்ளது.

தேர்வு செய்யப் படும் நபர்கள் துவக்க நிலை யிலான முதலீடு செய்யும் நிலையில் உள்ளவர்கள் மற் றும் வங்கி பரிமாற்ற வசதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு இலக்கிற் கான திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் ஆகும். இதில் அரசு மானியம் 25 சதவீதம் ஆகும்.

மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான குழு வினால் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகள் இறுதி செய்யப் படுவார்கள். பயனாளி நிலம், சொந்தமாக அல்லது குத்த கையாக வைத்திருத்தல் வேண் டும். இதேபோல தீவன உற் பத்திக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக அல்லது குத்தகையாக வைத்திருத்தல் வேண்டும். ஏதேனும் ஒரு கிராம பஞ்சாயத்தில் நிரந்தர முகவரிதாரராக இருக்க வேண்டும்.

கால்நடை பராமரிப் புத் துறையின் வேறு எந்த திட்டத்திலும் பயன்பெற்றி ருக்கக்கூடாது. தற்போது பசு, எருமை மாடு சொந்தமாக வைத்திருத்தல் கூடாது. பய னாளிகள் மத்திய-மாநில அர சுகளில் பணிபுரிபவர்களாக இருக்கக்கூடாது மற்றும் அவர்களது உறவினர்களும் அரசு பணியாளர்களாக இருத்தல் கூடாது.

இந்த வரை யறைகளின்படி தகுதியுள்ள பயனாளிகள் அருகாமையில் உள்ள கால் நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர் களிடம் வருகிற 28-ந்தேதிக் குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் பெயர், இனம், வயது, பிரிவு, முகவரி, ஆதார் எண், தொடர்பு எண் ஆகியவற்றை உள்ளடக்கிய தாகவும் 2 பாஸ்போர்ட்டு புகைப்படங்கள், முகவரிக் கான ஆதாரம், ஆளறி வதற் கான ஆதாரம் மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்ப தற்கான ஆதாரம் இருக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்