20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-17 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் மணவழகன் தலைமை தாங்கினார். டாக்டர் முகமதுமுகைதீன் முன்னிலை வகித்தார். தற்காலிக தீர்வாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனைத்து அரசு மருத்துவர்களும் அதிக அளவில் பயனடையும் வகையில் உரிய சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை வருகிற சட்டசபை கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக படி மற்றும் பிற ஊதிய முரண்பாடுகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ அலுவலர்களுக்கு துறை ரீதியிலான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங் கள் எழுப்பப்பட்டன. இதில் டாக்டர்கள் பவுல்செல்வன், பாலதண்டாயுதபாணி, ராஜராஜன், பாரதி, தனம், பவித்ரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங் கள் எழுப்பினர். அப்போது டாக்டர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்