காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-05-20 22:30 GMT
திருவாரூர்,

குடவாசலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் ஒன்றிய கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமாதிருஞானம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சிகாமணி, ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் நிஜாம்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், சங்கத்தின் மாநில இலக்கிய அணி செயலாளர் டேவிட்சத்தியநாதன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர் களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஊதியம்

அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயபால், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பக்கிரிசாமி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் குமரவேலு, கோட்டூர் ஒன்றிய செயலாளர் மணியன், பள்ளி கூட்டுனர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவேல், ஒன்றிய தலைவர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்