சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

செஞ்சி அருகே மலை அடிவாரத்தில் சிறுத்தையை நேரில் பார்த்ததாக முதியவர் கூறினார். எனவே கிராம மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் வனத்துறையினர் அறிவித்தனர்.

Update: 2018-05-21 21:48 GMT
செஞ்சி,

செஞ்சி அருகே மலையின் அடிவாரத்தில் இல்லோடு, தாங்கல், சண்டிசாட்சி, சாத்தனந்தல், மேல்தாங்கல், கீழ்தாங்கல், பென்னகர் மற்றும் அதனை சுற்றிலும் கிராமங்கள் உள்ளன. இந்த மலையில் விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் இல்லோடு கிராமத்தை சேர்ந்த சேகர்(வயது 37) என்பவரது கொட்டகையில் கட்டியிருந்த 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இந்த ஆடுகளை சிறுத்தைதான் கடித்து கொன்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் அதனை மறுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தாங்கல் கிராமத்தை சேர்ந்த ராமலிங் கம் (வயது 65) என்பவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக மலை அடி வாரத்துக்கு ஒட்டிச்சென்றார். அப்போது அவர், 2 பாறைகளுக்கு இடை யில் சிறுத்தை இருந்ததாகவும், அது தன்னை பார்த்து உறுமியதாகவும், உடனடியாக ஆடுகளை அங்கிருந்து ஓட்டிக் கொண்டு வேறு இடத்துக்கு சென்று விட்ட தாகவும் கிராம மக்களிடம் கூறினார். இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ராமலிங்கத்திடம் வனத்துறை யினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து ராமலிங்கம் கூறிய இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வனத் துறையினர் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். அது எந்தவகையான விலங்கு என்பதை கண்டறிய கேமராக் கள் மூலம் வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு செஞ்சி வனச்சரகர் பாபு, வனவர் ராஜா, வனக்காப்பாளர்கள் தாமோதரன், பழனிவேல் ஆகியோர் இல்லோடு மற்றும் தாங்கல் கிராமத்தில் ஒலிபெருக்கியுடன் சென்ற னர். அப்போது அவர்கள், சண்டிசாட்சி மலையில் மர்மவிலங்கு நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கை யுடனும் இருக்க வேண் டும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவில் தனியாக நடந்து செல்லக்கூடாது. மேய்ச்சலுக்காக கால்நடை களை மலைப் பகுதிக்கு ஓட்டிசெல்ல வேண்டாம். வீட்டிற்கு வெளியிலும், பாது காப்பில்லாத இடங்களிலும் இரவில் படுத்து தூங்கக் கூடாது. வெளியூரில் இருந்து இரவில் வீடு திரும்புபவர்கள் கூட்டமாக வரவேண்டும். அது எந்த வகையான விலங்கு என்பது பற்றி கண்டறிய வனத்துறை சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. கிராம மக்கள் பீதி அடைய வேண்டாம். அந்த விலங்கு பற்றி தகவல் ஏதேனும் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினர். மேலும் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரமும் கிராம மக்களுக்கு வினியோகம் செய்யப் பட்டது.

மேலும் செய்திகள்