புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் என்று புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளாா். #Narayanasamy

Update: 2018-05-26 07:13 GMT
புதுச்சேரி,  

புதுச்சேரி முதலமைச்சா்  நாராயணசாமி நிருபா்களுக்கு பேட்டி அளித்துள்ளாா். அவா் கூறியதாவது.

“ஆளுநர் கிரண்பேடி  புதுச்சேரியில் அதிகார மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்” என்றும்  2 ஆண்டு பதவிக்காலம் மே 29ல் முடிவதால் சொன்னபடி கிரண்பேடி பதவி விலகுவாா் என எதிா்பாா்க்கிறேன் என்றாா்.

இதைத்தொடா்ந்து கிரண்பேடி பற்றி புகார் அளித்தோம் ஆனால் மத்தியில் பாஜக அரசு இருப்பதால் எந்த பயனும் இல்லை என்ற செய்தியையும் தெரிவித்துள்ளாா்.  மேலும், புதுச்சேரியில்  பதவி ஏற்றதிலிருந்து ஆளுநா் கிராண்பேடி தன்னுடைய  பணியை 1 சதவிகிதம் கூட செய்யவில்லை  என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினா்.

இந்நிலையில் 4 ஆண்டுகளில் பெட்ரோல் , டீசல் விலையை உயா்த்தி பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தியதே பாஜக அரசின் சாதனை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

மேலும் செய்திகள்