கொலைமுயற்சி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-06-07 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 29), தொழிலாளி. இவருக்கும், படர்நிலத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், சிவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து அந்த வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர். இந்த வழக்கில் சிவராஜ் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், கோர்ட்டு உத்தரவுபடி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில், கொலை முயற்சி வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்கும் என சிவராஜ் பயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த சிவராஜூகு இன்னும் திருமணமாகவில்லை. 

மேலும் செய்திகள்