கடமலை–மயிலை ஒன்றியத்தில் தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

தக்காளி விலை வீழ்ச்சியால் கடமலை–மயிலை ஒன்றியத்தில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-06-08 21:30 GMT

கடமலைக்குண்டு,

கடமலை–மயிலை ஒன்றியத்தில் அருகவெளி, சிறப்பாறை, தாழையூத்து உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் அதிகமானது. இதனால் தக்காளி விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். விலை வீழ்ச்சியடைந்ததால் சில விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்ததற்கு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதே காரணம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்