ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு

ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-06-08 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், பாம்பன் உள்ளிட்ட ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் கடந்த இரு நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

மேலும் பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. விளம்பர போர்டுகள், கூரைகள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பறந்தன. தனுஷ்கோடி சாலையின் தெற்கு பகுதியில் இருந்து மணல் காற்றில் பறந்து சாலையில் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மணலில் சிக்கி திண்டாடி வருகின்றனர்.

இதேபோல ராமேசுவரம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் சுழல் காற்று வீசுகிறது. இதனால் குப்பைகள் மற்றும் மணல் காற்றில் பறந்து வந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியில் நடமாட தயங்குகின்றனர்.

மேலும் செய்திகள்