10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு 89.41 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி கொங்கன் மண்டலம் முதலிடம்

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.41 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். கொங்கன் மண்டலம் முதலிடம் பிடித்து உள்ளது.

Update: 2018-06-08 22:30 GMT
மும்பை, 

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.41 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். கொங்கன் மண்டலம் முதலிடம் பிடித்து உள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு

மராட்டியத்தில் எஸ்.எஸ்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 86 ஆயிரத்து 106 மாணவர்களும், 7 லட்சத்து 42 ஆயிரத்து 507 மாணவிகளும் என மொத்தம் 16 லட்சத்து 28 ஆயிரத்து 613 பேர் எழுதி இருந்தனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்தநிலையில், நேற்று மதியம் 1 மணிக்கு தேர்வு முடிவு வெளியானது. இதில், தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 14 லட்சத்து 56 ஆயிரத்து 203 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

89.41 சதவீத பேர் தேர்ச்சி

இவர்களில் 7 லட்சத்து 73 ஆயிரத்து 339 பேர் மாணவர்கள். 6 லட்சத்து 82 ஆயிரத்து 864 பேர் மாணவிகள். மாணவர்கள் 87.27 சதவீதமும், மாணவிகள் 91.97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 89.41 சதவீதம் ஆகும்.

கொங்கன் மண்டலத்தில் அதிகப்பட்சமாக 96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

குறிப்பாக மும்பை மண்டலத்தில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 609 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி இருந்தனர். இவர்களில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 151 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் ேதர்ச்சி விகிதம் 90.41 சதவீதம் ஆகும். மற்ற மண்டலங்களில் மாணவர்கள் பெற்ற ேதர்ச்சி விகிதம் வருமாறு:-

புனே 92.08, நாக்பூர் 85.97, அவுரங்காபாத் 88.81, கோலாப்பூர் 93.88, அமராவதி 86.49, நாசிக் 87.42, லாத்தூர் 86.30 சதவீதம் ஆகும்.

சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

1 லட்சத்து 83 ஆயிரத்து 752 மாணவர்கள் மற்றும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 385 மாணவிகள் சிறப்பு தேர்ச்சி (டிஸ்டிங்சன்) பெற்றுள்ளனர். இவர்களில் 63 ஆயிரத்து 331 பேர் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் ஆவர்.

முதல் கிேரடில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 444 மாணவர்களும், 2 லட்சத்து 59 ஆயிரத்து 446 மாணவிகளும், இரண்டாவது கிரேடில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 452 மாணவர்களும், 1 லட்சத்து 68 ஆயிரத்து 462 மாணவிகளும், தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று 63 ஆயிரத்து 691 மாணவர்களும், 35 ஆயிரத்து 571 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 லட்சத்து 14 ஆயிரத்து 41 தனித்தேர்வர்கள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி இருந்தனர். இவர்களில் 49 ஆயிரத்து 232 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 43.54 சதவீதம் ஆகும்.

மேலும் செய்திகள்