ரெயில் டிக்கெட் முன்பதிவு; 15 இடைத்தரகர்கள் கைது அதிகாரிகள் நடவடிக்கை

ரெயில் டிக்கெட் முன்பதிவு நிலையங்களில் 15 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-08 22:35 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு ரெயில்வேயின் கண்காணிப்பு குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் ரெயில் டிக்கெட் முன்பதிவு நிலையங்களில் 15 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

156 ரெயில்களில் 1,672 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததும், 1076 பேர் ஒழுக்கமற்ற முறையிலும், 48 பேர் ஆள்மாறாட்டம் செய்தும் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்