வழித்தவறி சுற்றித்திரிந்த ஆந்திர சிறுமி ‘வாட்ஸ்-அப்’ மூலம் கண்டுபிடித்த உறவினர்

வேலூரில் வழித்தவறி சுற்றித்திரிந்த ஆந்திர மாநில சிறுமி போலீசில் ஒப்படைக்கப்பட்டாள். வாட்ஸ் அப் மூலம் தெரிந்து வந்த உறவினரிடம், போலீசார் ஒப்படைத்தனர்.

Update: 2018-06-08 23:16 GMT
வேலூர்,

சித்தூர் மாவட்டம் திருப் பதியை அடுத்த ஸ்ரீகாளஹஸ்தி பகுதியை சேர்ந்தவர் சாமி துரை. இவருடைய மகள் புஷ்பாஞ்சலி (வயது 8). 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி விடுமுறையில் சிறுமி புஷ்பாஞ்சலி வேலூர் சத்து வாச்சாரி வ.உ.சி. நகரில் வசிக்கும் உறவினர் வேலு என் பவரின் வீட்டிற்கு வந்திருந் தாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் உறவினர் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வழித்தவறி வேலப்பாடிபகுதிக்கு சென்றுவிட்டாள். அங்கு மேற்கொண்டு செல்ல தெரியாமல் அழுதபடி நின்று கொண்டிருந் தாள்.

இரவு 10 மணி அளவில் அழுது கொண்டே நின்ற சிறுமியை அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் சந்தோஷ் என்பவர் பார்த்து விசாரித்துள்ளார். ஆனால் சிறுமிக்கு தமிழ் தெரியவில்லை. தெலுங்கில் மட்டுமே பேசியிருக்கிறாள். அதைத்தொடர்ந்து அந்த சிறுமியை வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி உறவினருடைய செல்போன் குறித்து கேட்டுள்ளனர். செல் போன் எண் தெரியவில்லை. உடனே சிறுமியை போட்டோ எடுத்து வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங் களில் போலீசார் பதிவிட்ட னர். வாட்ஸ்-அப்பில் சிறுமி புகைப்படம் வெளியானதை உறவினர் வேலு நேற்று காலையில் பார்த்துள் ளார். உடனடியாக அவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்