பிரான்சு கொடுத்த கவுரவம்

பிரான்சு அரசு பெண்கள் மத்தியில் விஞ்ஞான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘பெண்களும், அறிவியலும்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Update: 2018-06-10 07:13 GMT
உயர்கல்வி பயிலும் மாணவிகளிடம் அறிவியல் ஆர்வத்தை புகுத்தி அவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக மாற்றுவதற்கான முயற்சி இது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர் குழுவில் பிரியங்கா தாஸ் என்ற இளம் ஆசிரியை இடம் பிடித்திருக்கிறார். இந்தியரான இவருக்கு 26 வயது. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் அங்குள்ள மைக்ரோ செயற்கைக்கோள் கட்டமைக்கும் குழுவில் பணி புரிந்து வருகிறார். அத்துடன் சிறிய அளவிலான செயற்கைக்கோள் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். மாணவிகளிடம் விஞ்ஞான அறிவை வளர்க்கும் முயற்சியிலும் களம் இறங்கி இருக்கிறார்.

‘‘உயர் கல்வி பயிலும் மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு விஞ்ஞானம் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொடுக்கிறேன். மேலும் விஞ்ஞானம் சார்ந்த தவறான கருத்துக்களை உடைத்தெறியவும் முயற்சி செய்வேன்’’ என் கிறார், பிரியங்கா தாஸ். 

மேலும் செய்திகள்