நாளை மும்பை வரும் ராகுல் காந்தியை 1,000 ஆட்டோக்களுடன் சென்று டிரைவர்கள் வரவேற்கிறார்கள்

நாளை மும்பை வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை 1,000 ஆட்டோக்களில் சென்று அதன் டிரைவர்கள் வரவேற்க இருப்பதாக சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.

Update: 2018-06-10 22:30 GMT
மும்பை, 

நாளை மும்பை வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை 1,000 ஆட்டோக்களில் சென்று அதன் டிரைவர்கள் வரவேற்க இருப்பதாக சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.

மும்பை வருகை

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி நாளை(செவ்வாய்க்கிழமை) மும்பைக்கு வர உள்ளார். அவர் கோரேகாவ் கண்காட்சி மையத்தில் நடக்கும் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். மேலும் கட்சியின் தொண்டர்கள் மேல்மட்ட தலைவர்களுடன் நேரடி தகவல் தொடர்பு வைத்துக்கொள்ள உதவும் “சக்தி” என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

ராகுல் காந்தியை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளில் மும்பை காங்கிரஸ் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறியதாவது:-

ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பு

மும்பை வருகை தரும் ராகுல் காந்தியை 1,000 டிரைவர்கள் தங்களது ஆட்டோவுடன் சென்று வரவேற்று அழைத்து வர தயாராகியுள்ளனர். இது சாமானிய மனிதர்கள் எங்கள் கட்சி தலைவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும்.

ராகுல் காந்தி சாமானிய மனிதர்களின் உணர்வுகளுக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பவர் என்பதை ஆட்டோ டிரைவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். எனவே தான் அவரை அவ்வாறு வரவேற்று அழைத்துவர முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார்.

மேலும் செய்திகள்