மும்பைக்கு பணி இடமாற்றம் செய்யாவிட்டால் ‘குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்’

மும்பைக்கு பணி இடமாற்றம் செய்யா விட்டால் குடும்பத் துடன் தற்கொலை செய்துகொள்வேன் என பெண் போலீஸ் அதிகாரி உள்துறை அமைச் சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-06-11 23:40 GMT
மும்பை,

மும்பை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர் சுஜாதா பாட்டீல். தற்போது பதவி உயர்வு பெற்று ஹிங்கோலியில் துணை போலீஸ் சூப்பிரண் டாக பணிபுரிந்து வருகிறார். சுஜாதா பாட்டீலின் குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். சுஜாதா பாட்டீலுக்கு 17 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மேலும் அவர் சாங்கிலியில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அனிகேத் என்பவரது 3 வயது மகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சுஜாதா பாட்டீலின் கணவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனக்கு மும்பைக்கு பணி இட மாறுதல் கேட்டு வருகிறார்.

ஆனால் அதிகாரிகள் அவருக்கு பணி இடமாறுதல் வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இது சுஜாதா பாட்டீலுக்கு மிகுந்த விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், அவர் தன்னை மும்பைக்கு பணி இடமாற்றம் செய்யுமாறு மாநில உள்துறை அமைச்சம் மற்றும் டி.ஜி.பி. சதீஸ் மாத்தூருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ‘‘ மும்பையில் உள்ள கல்லூரியில் படிக்கும் தனது 17 வயது மகளுக்கு அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கருதுகிறேன். எனவே தனது பணி இடமாறுதல் கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் அல்லது விருப்ப ஓய்வுபெறுவேன், என அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

பெண் போலீஸ் அதிகாரி தற்கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்