பெருமாள் மலை அருகே விபத்துக்குள்ளான அரசு பஸ் பயணிகள் உயிர் தப்பினர்

கொடைக்கானல் நகரில் விபத்துக்குள்ளான அரசு பஸ் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2018-06-12 22:15 GMT
கொடைக்கானல்

கொடைக்கானல் நகரில் இருந்து பழனிக்கு நேற்று காலை 10.40 மணியளவில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இதனை ரவிச்சந்திரன் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். இந்த பஸ் பெருமாள் மலை அருகே உள்ள டைகர் சோலை பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. இது குறித்து பயணிகள் கூறுகையில், மலைப்பகுதியில் இயக்கப்பட்டு வரும் பல பஸ்கள் பழமையானதாகும். இதனால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மேற்கூரை சேதம் அடைந்து மழைத்தண்ணீர் உள்ளே புகுந்து விடுகிறது. மேலும் பக்கவாட்டில் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கப்படுவதால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மலைப் பகுதிகளில் புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்