காகிதப்பட்டறை பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ராமன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-06-12 22:42 GMT

வேலூர்,

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவேட்டை கலெக்டர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர், மாணவர்களுக்கு வகுப்பில் பாடம் நடத்தியதுடன் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை படிக்கச் செய்து, வாசிப்புத்திறனை சோதித்தார். மாணவர்கள் வீட்டுப் பாடத்தினை தினமும் செய்து முடித்து, அதனை ஒரு மணி நேரம் வாசித்துப் பழக வேண்டும், என அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சத்துணவு மையம், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு சுகாதாரமாகவும், சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்றும் சத்துணவு அமைப்பாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் பள்ளி கழிவறையை பார்த்த கலெக்டர், அதனை சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்