சென்டிரல் ரெயில் நிலையத்தில் தானியங்கி உணவு வழங்கும் எந்திரம்

மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தானியங்கி உணவு வழங்கும் எந்திரம் இந்த மாத இறுதியில் நிறுவப்படுகிறது.

Update: 2018-06-12 23:36 GMT
மும்பை,

கோயம்புத்தூர்- பெங்களூரு இடைேய இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளை கவரும் வகையில் தானியங்கி உணவு வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் மும்பை ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக தானியங்கி உணவு வழங்கும் எந்திரங்களை நிறுவ ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

இதன்படி முதல்முறையாக மும்பையில் மேற்கு ரெயில்ேவ வழித்தடத்தில் உள்ள மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தானியங்கி உணவு வழங்கும் எந்திரம் இந்த மாத இறுதியில் நிறுவப்பட உள்ளதாக இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) தெரிவித்து உள்ளது.

தானியங்கி உணவு வழங்கும் எந்திரத்தில் பயணிகள் சைவ, அசைவ பீசா மற்றும் பாப்கார்ன், ஜூஸ் வகைகள், பாக்கெட் உணவு வகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் கூறினார். 

மேலும் செய்திகள்