இந்திய வரைபடத்தை அவதூறாக சித்தரித்து முகநூலில் பதிவு வாலிபருக்கு வலைவீச்சு

இந்திய வரைபடத்தை அவதூறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-13 22:30 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ் தலத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 35). தமிழ் தேசிய குடியரசு கட்சியின் தலை வராக உள்ள இவர், தனது முகநூல் பக்கத்தில், அடுத்த மாதம்(ஜூலை) 17-ந் தேதி கும்பகோணத்தில் “தமிழர் பாதுகாப்பு தமிழர் தாயக மீட்பு” என்ற தலைப்பில் மாநாடு நடத்த இருப்பதாக பதிவு செய்து இருந்தார்.

அந்த பதிவில் இடம் பெற்றிருந்த இந்திய வரைபடத்தில், தமிழ்நாடு அமைந்துள்ள பகுதி கருப்பு மை பூசி அழிக்கப் பட்டிருப்பது போலவும், தமிழ்நாடு அமைந்துள்ள பகுதியில் ஒரு கை விலங்கிட்டும், மற்றொரு கை இலங்கை நாட்டுடன் கோர்த்து இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. மேலும் “இந்தி, இந்து, இந்தியாவை மறுப்பவர்களும், தமிழ், தமிழர், தமிழ்நாடு ஏற்பவர்” என்ற வாசகமும் அதில் இடம் பெற்றிருந்தது.

வலைவீச்சு

இதை கண்காணித்த சைபர் கிரைம் பிரிவு போலீசார், சிலம்பரசனின் முகநூல் பதிவில் இந்திய வரைபடம் அவதூறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கும்ப கோணம் மேற்கு போலீசார், தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்ததாக சிலம்பரசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்