நூதன முறையில் வீடுகளில் திருடி வந்தவர் சிக்கினார் ரூ.47 லட்சம் நகைகள் பறிமுதல்

நவிமும்பை கன்சோலியை சேர்ந்தவர் துக்காராம் அட்சுல்(வயது41). இவர் மீது 19 போலீஸ் நிலையங்களில் 37 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த அவரை கன்சோலியில் வைத்து தானே போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-20 23:00 GMT
மும்பை, 

நவிமும்பை கன்சோலியை சேர்ந்தவர் துக்காராம் அட்சுல்(வயது41). இவர் மீது 19 போலீஸ் நிலையங்களில் 37 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த அவரை கன்சோலியில் வைத்து தானே போலீசார் கைது செய்தனர். 

அவரிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் திருட்டு நகைகளை வாங்கிய 3 நகைக்கடை உரிமையாளர்களையும் போலீசார் கைது செய்து உள்ளனர். போலீஸ் விசாரணையின் போது, துக்காராம் அட்சுல் நூதன முறையில் வீடுகளில் நகைகளை திருடி வந்தது தெரியவந்தது.

அதாவது துக்காராம் அட்சுல் குடிசை பகுதியில் வீடுகளில் தனியாக இருப்பவர்களை சந்தித்து பேசுவார். அப்போது, பிரதமர் மற்றும் முதல்-மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டும் திட்டத்தின் பயனாளியாக சேர்க்க உதவி செய்வதாக கூறி, அவர்களிடம் இருக்கும் ஆவணங்களை நகல் எடுத்து வரும்படி கூறுவார். 

இதை நம்பி அவர்கள் நகல் எடுக்க வெளியே செல்லும் நேரத்தில் வீட்டில் இருக்கும் நகை, பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிடுவார்.மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்