உடற்பயிற்சி கூடத்துடன் அம்மா பூங்கா அமைச்சர் திறந்து வைத்தார்

காஞ்சீபுரம் மாவட்டம், ஊராட்சிகளில் தலா ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

Update: 2018-06-23 22:31 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம், வேங்கடமங்கலம் ஊராட்சிகளிலும் தலா ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலளார் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு மண்ணிவாக்கம், வேங்கடமங்கலம் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய அம்மா பூங்காவை திறந்து வைத்தார்.

இதில் காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், காஞ்சீபுரம் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லீமாரோஸ், முத்துசுந்தரம், ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, சாந்தி புருஷோத்தமன், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் துளசிங்கம், ஊராட்சி மன்ற செயலாளர்கள் ராமபக்தன், கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்