ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றும் பணி தீவிரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2018-07-07 22:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ரசாயனங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் 28–ந்தேதி மூடப்பட்டது. இந்த நிலையில், ஆலையில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டு இருந்த ஒரு கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அதில் இருந்த 2 ஆயிரத்து 124 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது.

பின்னர் தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2–ந்தேதி முதல் கந்தக அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

1,700 டன் கந்தக அமிலம்

நேற்று 6–வது நாளாக ரசாயனங்கள் அகற்றும் பணி நடந்தது. நேற்று 22 டேங்கர் லாரிகள் மூலம் சுமார் 500 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 77 டேங்கர் லாரிகள் மூலம் சுமார் 1,700 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளது.

இதேபோல் நேற்று 2 லாரிகளில் பாஸ்பாரிக் அமிலமும், 41 லாரிகளில் ஜிப்சமும் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து ரசாயனங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்