வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு ரூ.5லட்சம் நிதி உதவி நாராயணசாமி வழங்கினார்

புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலத்திற்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இருவழி பயண செலவும் முதல்–அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

Update: 2018-07-07 22:45 GMT
புதுச்சேரி,


புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலத்திற்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இருவழி பயண செலவும் முதல்–அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். அதன்படி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதன் அடிப்படையில் புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்ற 113 பேருக்கும், காரைக்காலில் இருந்து சென்ற 18 பேருக்கும், மாகியில் இருந்து சென்ற 104 பேருக்கும், ஏனாமில் இருந்து சென்ற 69 பேருக்கும் என 304 பேருக்கு ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 860க்கான காசோலை கல்வித்துறை இயக்குனரிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு நிதி உதவியை வழங்கினார். அதனை கல்வித்துறை இயக்குனர் குமார் பெற்றுக்கொண்டார். இந்த தொகை பள்ளிக்கல்வி துறை மூலம் சம்பந்தப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் செய்திகள்