இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருவாரூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-09 22:45 GMT
திருவாரூர்,

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முனியாண்டி, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டுமான தொழிலாளர் களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரிய முத்தரப்பு குழுவில் சி.ஐ.டி.யூ.வுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தொழிலாளர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். பண பயன்கள், ஓய்வூதியத்தை கால தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்