வனத்துறையில் பயிற்சிப் பணிகள்

டி.என்.பி.எஸ்.சி. வனத்துறையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது.

Update: 2018-07-10 10:12 GMT
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வனத்துறையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 158 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 10 இடங்கள், எஸ்.சி. பிரிவினருக்கான பற்றாக்குறை பணியிடங்களாகும்.

விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் 37 வயதுடையவர்களாக இருக்கலாம்.

பாரஸ்ட்ரி பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வேளாண்மை, தோட்டக்கலை, உயிரியல் உள்ளிட்ட 15 விதமான அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 1-8-2018-ந் தேதியாகும். 3-8-2018-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23 முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்