விமான ஆணைய நிறுவனத்தில் 908 அதிகாரி பணிகள்

விமான ஆணைய நிறுவனத்தில் மேலாளர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் போன்ற அதிகாரி பணிகளுக்கு 908 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Update: 2018-07-10 10:16 GMT
இந்திய விமான ஆணைய நிறுவனம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. (AAI) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் (மேனேஜர்) மற்றும் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதிகபட்சமாக மேனேஜர் பணியிடங்களில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 324 இடங்களும், சிவில் பிரிவில் 71 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 52 இடங்களும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களில் ஏர் டிராபிக் கண்ட்ரோல் பிரிவில் 200 இடங்களும், ஏர்போர்ட் ஆபரேசன்ஸ் பிரிவில் 69 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர நிதி, தீயணைப்பு, டெக்னிக்கல், அபிஸியல் லாங்வேஜ், கமர்சியல் போன்ற பிரிவில் மேலாளர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 908 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு...

மேலாளர் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30-6-2018 தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

பி.காம், ஐ.சி.டபுள்யு.எ., சி.ஏ., எம்.பி.ஏ., பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 16-7-2018 அன்று இணைய தளத்தில் செயல்பாட்டிற்கு வரும். 16-8-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 18-8-2018-ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 11-9-2018 முதல் 14-9-2018 வரை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.aai.aero/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம். 

மேலும் செய்திகள்