அரசு பள்ளிகளில் விரைவில் புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் - சட்டசபையில் மந்திரி என்.மகேஷ் தகவல்

அரசு பள்ளிகளில் விரைவில் புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் மந்திரி என்.மகேஷ் கூறினார்.

Update: 2018-07-10 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் உறுப்பினர் நரேந்திரா கேட்ட கேள்விக்கு பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் பதிலளிக்கையில் கூறியதாவது:-

மலை மாதேஸ்வரா கோவில் அடிவாரத்தில் 21 பள்ளிகள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு சிறப்பு படி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து முதல்-மந்திரியிடம் ஆலோசனை நடத்தப் படும். கர்நாடகத்தில் 58 பி.யூ.கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளன.

இதனால் அந்த கல்லூரிகளை மூடிவிட்டு வேறு பகுதிகளில் அந்த கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிய விதிமுறைகளின்படி அந்த கல்லூரிகள் தொடங்கப்படும். கட்சி அடிப்படையில் அந்த கல்லூரிகள் திறக்கப்பட மாட்டாது. கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் 25 ஆயிரத்து 600 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் விரைவில் புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த நியமன பணிகள் இன்னும் 15 நாட்களில் முடிவடையும். மீதமுள்ள காலியிடங்களில் கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி களில் கல்வி தரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு என்.மகேஷ் கூறினார்.

மேலும் செய்திகள்