அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தால் ஊழலில் பங்கு பெற்றதாக அர்த்தம், திருநாவுக்கரசர் பேட்டி

அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தால் ஊழலில் பங்கு பெற்றதாக அர்த்தம் என சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார்.

Update: 2018-07-10 23:15 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக அமைச்சர்கள் பா.ஜனதாவின் நிழலாக, பினாமியாக ஆட்சியை தக்கவைத்து கொண்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க அமைச்சர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

காங்கிரஸ் கட்சியை தரக்குறைவாக விமர்சித்தால் அ.தி.மு.க. வரலாறும், அமைச்சர்களின் வரலாறும் எனக்கு தெரியும். பல வி‌ஷயங்களை வெளியே சொல்ல நேரிடும். பா.ஜனதாவை சந்தோ‌ஷப்படுத்த காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே அதிகமான ஊழல் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருக்கிறார். பா.ஜனதா கட்சி எதிர்காலத்தில் ஊழல் கட்சியுடன் கூட்டணி அமைக்காது என நம்புகிறேன். ஊழல் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்தால் ஊழலில் பங்கு பெற்றதாக தான் அர்த்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்