நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி

நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-10 22:28 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் நிலையிலான அலுவலர்களுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்த முன்னோடி பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், அரசு அலுவலர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் தேவையான விவரங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் ரெகொபெயாம், பிரிவு அலுவலர்கள் ஜெகதீஷ், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன், ஆய்வுக்குழு துணை அலுவலர் கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு வருகிற 13-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. 

மேலும் செய்திகள்